மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு அளிப்போம்! – கமல் வலியுறுத்தல்

மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு அளிப்போம்! – கமல் வலியுறுத்தல்

பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
வருகிற 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்களாகவே ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தன்னுடைய நாட்டு மக்களுடனான உரையில் கேட்டுக் கொண்டார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

kamal-mnm

மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், என்னை ஆதரிப்பவர்கள் வருகிற 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய பிரதமர் அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்குக்கு என்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிக மோசமான நிலை. இதை எதிர்கொள்ள மிகக்கடுமையான முறைகளைக் கையாள வேண்டும். இந்த மிகப்பெரிய பாதிப்பு நம்மை நெருங்காமல் இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், வீட்டுக்குள் பாதுகாப்பா இருப்போம்” என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பதிவில் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், டிஎஸ்பி உள்ளிட்டவர்களையும் டேக் செய்துள்ளார்.