மக்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை பரவிடச் செய்யுங்கள்! – எடப்பாடிக்கு கமல் வாழ்த்து

 

மக்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை பரவிடச் செய்யுங்கள்! – எடப்பாடிக்கு கமல் வாழ்த்து

உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்ய வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்ய வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

edappadi-palanisamy-7

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்” என்று கூறியுள்ளார்.