மக்கள்னா யாரு? ஓவியா, ஆராவுக்கு ஓட்டுபோடுறவங்க தானா? விறுவிறுப்பாக வெளியானது சிவகார்த்திகேயனின் அடுத்த பட ட்ரைலர்

 

மக்கள்னா யாரு? ஓவியா, ஆராவுக்கு ஓட்டுபோடுறவங்க தானா? விறுவிறுப்பாக வெளியானது சிவகார்த்திகேயனின் அடுத்த பட ட்ரைலர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ட்ரைலர் வெளியானது. 

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ட்ரைலர் வெளியானது. 

கனா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் சின்னதிரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்துள்ளார் . இப்படத்தை பிளாக் ஷீப் குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். 

மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுயடைந்த நிலையில் வரும்  ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. காமெடி கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சமூக பிரச்சனை பற்றி பேசப்பட்டிருப்பதாக ட்ரைலர் மூலம் தெரிகிறது. மேலும் சமீபத்தில் படத்தின் இண்டர்நெட் பசங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.