மக்களை கூட்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண் சாமியார்.. அதிரடியாக கைது செய்த போலீசார்; ஆசிரமத்திற்கு சீல்!

 

மக்களை கூட்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண் சாமியார்.. அதிரடியாக கைது செய்த போலீசார்; ஆசிரமத்திற்கு சீல்!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவிய 4 முதல் 5 வாரத்தில் பன்மடங்காக பரவும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அபாய கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் முழு காரணம், மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக தான். 

ttn

அதனால் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா என்னும் பகுதியில்  ‘மா ஆதி சக்தி’  என்ற ஆசிரமம் சயல்பட்டு வருகிறது. அதனை ஒரு பெண் சாமியார் நடத்தி வருகிறார். அவர் தினமும் கூட்டு பிரார்த்தனை என்ற பேரில் மக்களை கூட்டமாக கூட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற போலீசார் கூட்டத்தை கலைக்க சொல்லி பெண் சாமியாரை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் சாமியார் மறுப்பு தெரிவித்ததோடு போலீசாரையும் மிரட்டியுள்ளார். இதனால் கடுப்பான போலீசார், அங்கிருந்த மக்கள் மீது லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண் சாமியாரை கைது செய்த போலீசார், ஆசிரமத்திற்கும் பூட்டி சீல் வைத்துள்ளனர்.