மக்களை கவரும் மக்கள் செல்வனின் ‘மெழுகு சிலை’!

 

மக்களை கவரும் மக்கள் செல்வனின் ‘மெழுகு சிலை’!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஐயா’ கேரட்கருக்கு பிரபல மாலில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஐயா’ கேரட்கருக்கு பிரபல மாலில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நாடக கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட 5 முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ள நிலையில், யாரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது திரைப்படமான ‘சீதக்காதி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘அய்யா’ கேரக்டரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெழுகு சிலையை இயக்குநர் மகேந்திரன் மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் விஜய் சேதுபதியின் மெழுகு சிலை அருகே புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

விஜய் சேதுபதியின் 25வது படம், ‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ வெற்றிக் கூட்டணி, விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம், முதிர்ச்சியான நடிப்பு என ‘சீதக்காதி’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.