‘மக்களுக்கு வீடு போய் சேரணும்…அப்படியில்லனா உங்க யாருக்கும் வேலை கிடையாது’ : அரசு அதிகாரிகளை தெறிக்கவிடும் கலெக்டர்!

 

‘மக்களுக்கு  வீடு போய் சேரணும்…அப்படியில்லனா உங்க யாருக்கும் வேலை கிடையாது’ : அரசு அதிகாரிகளை தெறிக்கவிடும் கலெக்டர்!

நான் கலெக்டர் பேசுறேன். கடந்த வாரம் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செஞ்சோம்.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மூலம் பயணிகளுக்கு வரும் திங்கட்கிழமைக்குள் வீடு கிடைக்க ஏற்பாடு செய்யாவிட்டால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வேன் என்று அம்மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 

kandasamy

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வாட்ஸ்அப்பில்  பேசியுள்ள  ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு அளிக்காமல், காலம் தாழ்த்தி வரும் அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து வெளியான அந்த ஆடியோவில் கலெக்டர் கந்தசாமி பேசியிருப்பதாவது:-

‘வணக்கம்ங்க  நான் கலெக்டர் பேசுறேன். கடந்த வாரம் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செஞ்சோம்.  தகுதியானவங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அந்த வீடு யாருக்கும் போகமாட்டேன்கிறது.  இதுல இன்னும் கூட நெறைய புகார் வருது.  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கூட இந்த புகார் வந்துருக்கு. 

kandasamy

உங்க எல்லாருக்கும் சொல்லிருக்கேன். திங்கட்கிழமை தான் உங்களுக்கு கடைசி. அதுகுள்ள பயனாளிகளுக்கு வீடு கொடுத்து இருக்கனும். அப்படி இல்லனா நான் எத்தன பேர வேண்டுமானாலும் சஸ்பெண்ட் பண்ணுவேன். ஒன்னு இந்த மாவட்டத்துல கலெக்ட்ரா நான் இருக்கனும். இல்ல நீங்க இருக்கனும். அத நீங்க தான் முடிவு பண்ணனும்.  இதனை நீங்கள் எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. நீங்க தப்பு பண்ணுறத பார்க்க நான் இங்கு உட்காரல. தப்பு செய்பவர்களுக்கு காவல் காப்பவன் நான் இல்ல. இதுவே கடைசி. இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பஞ்சாயத்து செயலாளர்களும் இதனை சீரியசாக எடுத்துகோங்க.  திங்கட்கிழமை சாயங்காலம் நீங்க  வேலையை விட்டு போறீங்க… வேலையோட போறீங்களான்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்’ என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார். 

இந்த வாய்ஸ் மெசேஜை கலெக்டர் சந்தசாமி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.