மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது: முதல்வர் குற்றச்சாட்டு

 

மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது: முதல்வர் குற்றச்சாட்டு

மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க திமுக முயன்றதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்

சேலம்: மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க திமுக முயன்றதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பாண்டு பொங்கல் பண்டிகையின் போது, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கலாம் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்த பொருட்களும் வாங்கலாம் என்ற அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், சேலத்தில் பல்வேறு நிகழ்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க திமுக முயன்றதாக குற்றம் சாட்டினார்.

மேலும், திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது. கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார். நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி சாடினார்.