மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? மோடியிடம் பாஜக தொண்டர் கேள்வி… இறுகிய பிரதமர் முகம்

 

மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? மோடியிடம் பாஜக தொண்டர் கேள்வி… இறுகிய பிரதமர் முகம்

நடுத்தர மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என புதுச்சேரியை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி: நடுத்தர மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என புதுச்சேரியை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சூழலில் பிரதமர் மோடி, தேர்தலை எதிர்கொள்வது குறித்து நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன்  நமோ செயலி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், புதுச்சேரி  மாநில பாஜக நிர்வாகிகளுடன் நேற்று அவர் கலந்துரையாடினார். அதில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மக்களை சந்தியுங்கள். கடந்த முறையை விட கூடுதல் இடங்களை பெற பாடுபடுங்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள் என்றார்.

இதனையடுத்து நிர்மல் குமார் ஜெயின் என்ற தொண்டர், மோடியிடம், நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை வசூலிப்பதில் மட்டும் குறியாக உள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பி அவர்கள் நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுங்கள் என கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி இறுகிய முகத்துடன், நீங்கள் வியாபாரி. வர்த்தக ரீதியாக பேசுகிறீர்கள். நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என பதிலளித்தார். பாஜகவை தொண்டர் ஒருவரே பிரதமரிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.