“மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை”: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

“மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை”: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உதவ விரும்பும் நபர்கள் பொருளாக மாவட்ட ஆட்சியர்களிடமோ அல்லது மாநகராட்சி ஆணையரிடமோ கொடுக்கலாம் என்றும் அரசு உத்தரவிட்டது.

அரசியல் கட்சிகளும் தன்னார்வலர்களும் தனியாக நிவாரண பொருட்கள் கொடுக்க கூடாது என்றும் உதவ விரும்பும் நபர்கள் பொருளாக மாவட்ட ஆட்சியர்களிடமோ அல்லது மாநகராட்சி ஆணையரிடமோ கொடுக்கலாம் என்றும் அரசு உத்தரவிட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதனை எதிர்த்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

ttn

திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அரசின் நிபந்தனைகளுடன் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கலாம் என்று நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர்.  நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொருட்கள் வழங்க 4 பேர் மட்டுமே செல்லா வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிவாரண பொருட்களை வழங்கா செல்லுபவர்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் மற்றும் சானிடைசர் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்