மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த இளம் மருத்துவர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்!

 

மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த இளம் மருத்துவர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்!

மாயாற்றை தாண்டி கிராமத்துக்குள் செல்கின்றனர். இதன் காரணமாக இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எந்த மருத்துவரும் பணிக்கு வரவதில்லையாம். 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதிக்கு நடுவே தெங்குமரஹாடா கிராமம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசல் மூலம் மாயாற்றை தாண்டி கிராமத்துக்குள் செல்கின்றனர். இதன் காரணமாக இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எந்த மருத்துவரும் பணிக்கு வரவதில்லையாம். 

t

இந்நிலையில், சிறுமுகையைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற 26 வயது மருத்துவர் இங்கு தங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள மக்களிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகி வந்த ஜெயமோகன், நேரம் காலம் பார்க்காது மக்களுக்கு சேவை செய்து மருத்துவர் என்பதை தாண்டி அப்பகுதி வாசிகள் மனதில் கடவுளாக வாழ்ந்து வந்துள்ளார். 

tt

இதையத்து கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிபட்டு வந்த மருத்துவர் ஜெயமோகன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். 
இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவர் ஜெயமோகன் உயிரிழந்தார். ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்றும் அவருக்கு டெங்கு காய்ச்சல் என்றும்  ஆரம்ப சுகாதாரநிலையத்தினர் தெரிவிக்கிறார்கள். 

இளம் மருத்துவரின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது