மக்களின் மறியல் மனித நேயத்தை காத்துள்ளது! கலங்கும் பிரேமலதா விஜயகாந்த்

 

மக்களின் மறியல் மனித நேயத்தை காத்துள்ளது! கலங்கும் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

doctor simon

போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா வைரசால் இறந்தவர்களுக்கு தம்முடைய இடத்தை அதாவது ஆண்டாள் கல்லூரியிலுள்ள ஒரு பகுதி இடத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஆடியோவை வெளியிட்டுள்ளார் அதில், “மருத்துவம் பார்த்து மறித்துப்போன மருத்துவரின் மனைவிக்கு ஆறுதல் கூற இயலாதபோது மனித நேயம் எங்கே போனது என்று மனவேதனையுற்றபோது என் மனதில் தோன்றியதை மடலாக எழுதியுள்ளேன். மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவம் பார்த்த இந்த நிலை என்றால் சாதாரண மானுடரின் நிலை என்னவோ? என்று எண்ணியபோது மனிதநேயமிக்கவர் தன் மண்ணை மனமுவந்து மறித்துப்போனவர்களுக்கு மயான பூமியாக மாற்றிக்கொள்ளலாம் என்று தன் மக்களுக்கு தர முன்வந்தபோது மனித நேயம் மறையவில்லை நல்ல மனிதர்கள் வடிவில் உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது என்பதை மருத்துவர்களும், மற்றவர்கள் அனைவரும் பாராட்டினர். மக்கள் செய்த மறியல் மீண்டும் மனித நேயத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. மனிதநேயம் காக்கப்படும்போது மக்கள் குலமும் காக்கப்படும். நன்றி!” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.