மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்! நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்- காங்கிரஸ்

 

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்! நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்- காங்கிரஸ்

பொதுத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

பொதுத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி சார்பில் இன்று டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கினார். ஆனால் அதை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்துள்ளது.

கூட்டத்தையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “ ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்; ஆனால் ராகுல் காந்தியின் முடிவை காங். காரிய கமிட்டி ஒருமனதாக நிராகரித்தது. மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம். நாட்டுக்காக தொடர்ந்து உழைக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. தேர்தலில் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” எனக்கூறினார்,