மக்களிடையே மனித தன்மை குறைந்து வருகிறது – ஆளுநர் புரோஹித் பேச்சு

 

மக்களிடையே மனித தன்மை குறைந்து வருகிறது – ஆளுநர் புரோஹித் பேச்சு

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்ரீ சனாதனா தர்மா வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும், பூரண வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். மகாத்மா காந்தி போல் எளிமையாக இருந்தால் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்லலாம். அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பதே மனித தன்மை, ஆனால் மக்களிடையே மனித தன்மை குறைந்து வருவது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆளுநர் புரோஹித் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக தமிழக முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.