மக்களால் வெளியிடப்பட்டது ’பேட்ட’ திரைப்பட பாடல்கள்

 

மக்களால் வெளியிடப்பட்டது ’பேட்ட’ திரைப்பட பாடல்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மக்களால் வெளியிடப்பட்டது, 8828888028 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பொதுமக்களே பேட்ட திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டனர். திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.