மக்களவை தேர்தல் 2019; மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

மக்களவை தேர்தல் 2019; மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இரண்டையும் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

kamalhaasan

அந்த வகையில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றி வரும் கமல்ஹாசன், வருகின்ற மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் காணும் என அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் “பேட்டரி டார்ச்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

se ku tamilarasan

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி என்ற முழக்கத்துடன் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், வருகிற 24-ம் தேதி கோவையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.