மக்களவை தேர்தல் 2019: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு மோடியின் வேண்டுகோள்?!

 

மக்களவை தேர்தல் 2019: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு மோடியின் வேண்டுகோள்?!

ஜனநாயக கட்சி, மதச் சார்பற்ற கட்சி என அரைகூவல் விடும் பாரத பிரதமர் மோடி, இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக கட்சி, மதச் சார்பற்ற கட்சி என அரைகூவல் விடும் பாரத பிரதமர் மோடி, இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் துவங்க இருப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். சச்சின், ஷாருக்கான் முதல் பல்வேறு திரையுலக பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும், இயக்கங்களையும், விளையாட்டு வீரர்களையும்  டிவிட்டரில் டேக் செய்து, உங்கள் பிரபலத்தன்மையை பயன்படுத்தி அதிக மக்களை ஓட்டுப்போட செய்யுங்கள். அதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என பதிவிட்டுள்ளார். இப்படி அவர் டேக் செய்து கேட்டுக்கொண்டதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஒன்று.

ஜனநாயக கட்சி, மதச் சார்பற்ற கட்சி என பாஜக பற்றி கூறும் மோடி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு நட்பு பாராட்டிய வண்ணமே இருக்கிறார். அவர் கட்சி உறுப்பினர்களில் பலரும் அவ்வாறே இருக்கின்றனர். மகாத்மா காந்தியின் படுகொலையில் தொடர்புடைய இயக்கம் என சர்தார் வல்லபாய் பட்டேலால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 

rss

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடைசெய்த வல்லபாய் படேல் அதுகுறித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பற்றி, அவர்கள் பேச்சுகளில் எல்லாம் மதவாத விஷம் கலந்திருக்கிறது. அந்த விஷம் இறுதியாக காந்தியின் உயிரை பறித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

rss

பாஜகவினர் தங்கள் கட்சியை மதச் சார்பற்ற கட்சி என்று சொன்னாலும், அது காவிகளின் கூடாரமாகவே செயல்பட்டு வருகிறது.