மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை; பிஷப் கவுன்சில் திடீர் முடிவு!

 

மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை; பிஷப் கவுன்சில் திடீர் முடிவு!

மதச்சார்பின்மை, ஒற்றுமை, ஜனநாயகம் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

திருவனந்தபுரம்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை என கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் வாக்குகளை பெரும் பொருட்டு அந்த சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் அரசியல் கட்சிகள் பேசி அவர்களது வாக்குகளை பெறுவது வழக்கம்.

bishop

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை என கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் கீழ் இயங்கும் கேரள கத்தோலிக்க ஆயர்கள் குழுவானது, இதற்கான சுற்றறிக்கையை அதன் கீழ் இயங்கும் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளது.

மதச்சார்பின்மை, ஒற்றுமை, ஜனநாயகம் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 61.41 லட்சம் கிறிஸ்தவர்களில் 50 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் ஆவார்கள்.

church

அரசியல் அமைப்பின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள், நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டுக்கு ஆபத்து எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதி, மதம், உண்ணும் உணவு, பொருளாதார சூழ்நிலைகளை வைத்து சமூகத்தில் இருந்து யாரும் வெளியேற்றப்படவோ, மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆளாகவோ கூடாது என அந்த அறிக்கையில் கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவர் பேராயர் சூசை பாக்கியம் தெரிவித்துள்ளார். 

இதையும் வாசிங்க

பதவி போச்சே; நொந்துபோன ராதாரவி?!