மக்களவை தேர்தலில் பாஜக 264 இடங்களை கைப்பற்றும்: பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு!
2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: 2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்குகிறது. 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது
இந்நிலையில், ஏபிபி சி-வோட்டர் மக்களவை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகக் கூட்டணி 264 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 141 இடங்களும், மற்றவர்கள் 138 இடங்களும் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
#DeshKaMood – Uttar Pradesh (80 seats) ABP News-CVoter survey predicts 47 seats for the grand alliance, 29 for NDA, UPA 4 LIVE Updates: https://t.co/DklVA2kRqn pic.twitter.com/u7HW644kTx
— ABP News (@abpnewstv) March 10, 2019
அதன் விவரம் பின்வருமாறு :-
பீகார் (மொத்தம் 40 தொகுதி )
பாஜக கூட்டணி – 36
காங்கிரஸ் கூட்டணி – 4
உத்திரபிரதேசம் (மொத்தம் உள்ள 80 தொகுதி)
மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு 47
பாஜக கூட்டணி 29
காங்கிரஸ் கட்சி 4
மகாராஷ்டிரா (மொத்தம் உள்ள 48 தொகுதி)
பாஜக கூட்டணி 35
காங்கிரஸ் கூட்டணி 13
மேற்கு வங்காளம் (மொத்தம் உள்ள 42 தொகுதி)
பாஜக கூட்டணி – 8
திரிணாமுல் காங்கிரஸ் – 34
ஒடிசா (மொத்தம் உள்ள 21 தொகுதி)
பாஜக -12
பிஜூ ஜனதா தளம் கட்சி – 9
ஜார்க்கண்ட் (மொத்தம் உள்ள 21 தொகுதி)
பாஜக – 3
காங்கிரஸ் கூட்டணி – 10
ஜேவிஎம் கட்சி – 1
சத்தீஸ்கர் (மொத்தம் உள்ள 11 தொகுதி)
பாஜக கூட்டணி – 6
காங்கிரஸ் கூட்டணி – 5
ராஜஸ்தான் (மொத்தம் உள்ள 25 தொகுதி)
பாஜக கூட்டணி – 20
காங்கிரஸ்- 5
டெல்லி (மொத்தம் உள்ள 7 தொகுதி)
பாஜக – 7
பஞ்சாப் (மொத்தம் உள்ள 13தொகுதி)
காங்கிரஸ் கூட்டணி – 12
பாஜக – 1
ஹரியானா (மொத்தம் உள்ள 10 தொகுதி)
பாஜக கூட்டணி – 7
காங்கிரஸ் கூட்டணி – 3
உத்தரகண்ட் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பில் மூலம் தெரியவந்துள்ளது