மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வேண்டுமா… இதையெல்லாம் செய்யாதீங்க !

 

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வேண்டுமா… இதையெல்லாம் செய்யாதீங்க !

குடும்ப தகராறுகள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதல் காரணமாக இருப்பது ‘வாய் தகராறு’தான் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் பேசும் வார்த்தைகள். பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசினால்தான் அதிலிருந்து விடுபட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை! பேசும்போது பிறருக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைக்கும் விதத்தில் உங்கள் விவாதம் இருக்க கூடாது.பொதுவாக பிரச்சினையை அணுகுவதில் பொறுமையும்,நிதானமும் ரொம்ப முக்கியம்.கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறானதாகவே இருக்கும்.

குடும்பங்கள் பிரிவதற்கு இன்றைக்கு  முக்கிய காரணமாக இருப்பது… எதற்கெடுத்தாலும் ஆர்க்யுமெண்ட் செய்வதுதான்! சாதாரணமாக ஆரம்பிக்கும்  வாய்தகறாரு வளர்ந்து பெரிய அளவில் வெடித்து விரிசலை உண்டாக்கி விடுகிறது! ‘பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்… பேசிய வார்த்தை உனக்கு எஜமான்’ என்பதை பலரும் உணருவதே கிடையாது!

Happy life

குடும்ப தகராறுகள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதல் காரணமாக இருப்பது ‘வாய் தகராறு’தான் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் பேசும் வார்த்தைகள். பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசினால்தான் அதிலிருந்து விடுபட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை! பேசும்போது பிறருக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைக்கும் விதத்தில் உங்கள் விவாதம் இருக்க கூடாது.பொதுவாக பிரச்சினையை அணுகுவதில் பொறுமையும்,நிதானமும் ரொம்ப முக்கியம்.கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறானதாகவே இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகளை வளர விடுவதோ,நாள் கணக்கில் நீடித்துக்கொண்டோ போகவே கூடாது.அதுவே திருமண பந்தத்தை உடைத்துவிடும். முடிந்தவரை உங்கள் வாழ்க்கை துணையுடன் சண்டை போடுவதை தவிர்க்க பாருங்கள்.அன்பு செய்யுங்கள்..

1.நீயா நானா?

உங்களில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க வாதாடுகிறீர்கள். ஆனால், இதில் உங்கள் ஈகோ வெளிவருகிறது. யார் சொல்வது சரி தவறு என்பதை நிர்ணயிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சண்டையிட்ட உங்கள் பேச்சு தகராறில் முடிகிறது. யாரும் உண்மையில் 100% சரியாக இருக்க முடியாது அனைவரிடத்திலும் குறைகளும் தப்பிதங்களும் இருக்கும். அதற்காக ஆர்க்யுமெண்ட் வருவதும் சகஜம்தான்! ஆனால்,அவைகளையே  முதன்மை படுத்தினால் வாழ்க்கையின் இன்பம் தொலைந்துவிடும்.

Fight bw boy and girl

2.நீ வேலை செய்ய மாட்டியா?!

கணவன் மனைவி இருவரும் தங்கள் வேலைகளில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையுடன் இருக்க வேண்டும். இது உன் வேலை நான் செய்யமாட்டேன் அப்படி சொல்லுவதில் நியாயம் இல்லை! இருவரும் ஒரு பேலன்ஸ் வைத்து வேலைகளை சமமாக பிரித்துக்கொண்டு செய்தால் யாருக்கும் அதிக பளு இருக்காது. இருவரும் சமமாக வேலைகளை பிரித்துக்கொண்டு செய்தால் ஆர்க்யுமெண்ட்டுக்கு வேலையே இருக்காது.

fight

3.நீ எனக்கு சொல்ல வேண்டாம் எனக்கு தெரியும்!

கணவன் மனைவி இருவரும் ஒன்றுபோல் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் ஒரு செயல் பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்களுக்காக முடிந்த அளவுக்கு செய்ய தவிருங்கள்  அதைவிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதையே செய்யும்போது அவர்களுக்கு உங்கள்மீது ஒருவித வெறுப்பு வந்துவிடும் பிற்காலத்தில் நீங்கள் விளையாட்டிற்கு செய்யும் சிறு செயல் கூட அவர்களை மிகவும் பாதித்துவிடும்.

Fight bw husband and wife

4.சிக்கனம்:

Thrift

உங்கள் குடும்ப கணக்குகளை இருவரும் சேர்ந்து சமாளிக்க வேண்டும், குடும்ப பட்ஜெட் போடும்போது இருவருக்கும் நடக்கும் செலவுகள் என்னென்ன என்று தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக கணவரோ அல்லது மனைவியோ அதிகமாக பணத்தை செலவு செய்தால் குடும்பங்களில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்.செலவுகளை இருவரும் பார்த்து பகிர்ந்து செய்தல் வேண்டும், அப்போதுதான் குடும்ப நடத்துவதில் இருக்கும் சிக்கல்களையும் சவால்களையும் இருவரும் அறிய முடியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லுதலும் நீங்கும். 

சண்டைகளையும், தகராறுகளையும் தவிர்த்து ஒற்றுமையுடனும் மன நிம்மதியுடனும் இருங்க! நீங்க சந்தோசமா இருக்கணுமா நோ ஆர்க்யுமெண்ட்.. பீ ஹேப்பி.!