மகாளய பட்சம் ஆரம்பம்:  குடும்பத்தையும் அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் மட்டுமே.

 

மகாளய பட்சம் ஆரம்பம்:  குடும்பத்தையும் அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் மட்டுமே.

மகாளய அமாவாசையன்று புனிதத் தலங்களிலோ அல்லது அருகில் இருக்கும் கோயிலுக்கோ சென்று மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும் காலமே ஆகும்.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் வழிபாடுகளில் இந்த மகாளய பட்சம் வழிபாடுதான் முதன்மையானது.

மகாளய பட்சம் வழிபாடு என்பது பித்ருக்களான மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய ஒன்றாகும்.

mk 15

மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்களும் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சமாகும்.பித்ரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.

நம்மை பெற்றவர்கள், தாத்தாக்கள்,பாட்டிகள் மற்றும் இதர முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்கள் தெய்வத்துக்கு சமமாக மாறி விடுகிறார்கள்.இந்த பிரபஞ்சத்தில் அவர்களுக்கென்றே பித்ருலோகம் உள்ளது. மரணத்துக்கு பிறகு அங்கு சென்று விடும் நம் மூதாதையர்கள் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அங்கிருந்து கொண்டு நமக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.

mk 68

நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்ய தவறுவதே இல்லை. உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கேற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான் அவர்களது குடும்பம் இந்த பூவுலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்

mk 96

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நம் குழந்தைகளின் வாழ்க்கையும் செழிப்பாகும் என்பது உறுதி.

மகாளய பட்சத்தில் வரும் விசேஷமான நாட்கள்:

புரட்டாசி 12 (28.09.2018) வெள்ளி  – மகாபரணி  – அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 15 (01.10.2018) திங்கள்  – மகாவியதீபாதம்  – அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 16 (02.10.2018) செவ்வாய்  – மத்யாஷ்டமி  – அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 17 (03.10.2018) புதன்  – அவிதவாநவமி  – அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 20 (06.10.2018) சனி  – சன்னியஸ்தமாளயம்  – சன்னியாசிகளுக்கு

புரட்டாசி 21 (07.10.2018) ஞாயிறு  – கஜச்சட்சமயமாளயம்  – விதவைகள் அனுஷ்டிப்பதற்கு

புரட்டாசி 21 (07.10.2018) ஞாயிறு  – சஸ்த்ரஹத மாளயம்  – துர்மரணம் நேரிட்டவருக்கு தர்ப்பணம் விட மிக மிக முக்கியமான நாட்களாகும்.