மகாராஷ்ட்ரா அமைச்சர் கர்நாடகாவில் கைது!

 

மகாராஷ்ட்ரா அமைச்சர் கர்நாடகாவில் கைது!

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் போராட்டம் நடத்த திட்டமிட்ட மகாராஷ்ட்ரா அமைச்சர் ராஜேந்திரா பாட்டீலை போலீசார் கைது செயதனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் போராட்டம் நடத்த திட்டமிட்ட மகாராஷ்ட்ரா அமைச்சர் ராஜேந்திரா பாட்டீலை போலீசார் கைது செயதனர்.

minister

கர்நாடகாவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் 1956-ல் இருந்தே ஒரு எல்லைத் தகராறு இருக்கிறது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பல போராட்டங்கள் நடந்து பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தை முழுமையாகவும்,பாகல் கோட்டை,விஜய புரா,கல்புர்கி மாவட்டங்களைச் சேர்ந்த 800 கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டுமென்று சிவசேனா போராடி வருகிறது. 

mnister

பெலஹாவியில் இயங்கி வரும் மஹாராஷ்டிர ஏகிகிரண் சமிதி அமைப்பின் சார்பில் எல்லைப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கர்நாடகா போலீஸ் அனுமதி தரவில்லை.

karnata

இதை மீறி நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள மஹாராஷ்டிர மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேந்திர பாட்டீல் ரகசியமாக பெலஹாவி வந்தார். அவரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.