மகாராஷ்டிரா விவசாயிகள் ஹேப்பி! ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி! உத்தவ் தாக்கரே அறிவிப்பு….

 

மகாராஷ்டிரா விவசாயிகள் ஹேப்பி! ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி! உத்தவ் தாக்கரே அறிவிப்பு….

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் இன்று மகாத்மா ஜோதிபா புலே ஷெட்கரி கர்ஜாமுக்தி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

விவசாயிகள்

இந்த திட்டம் 2020 மார்ச் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என உறுதியாக கூறினார். மேலும் சிவ் போஜன் திட்டத்தின்கீழ், மாநில அரசு ஏழை மக்களுக்கு ரூ.10க்கு உணவு வழங்கும் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஏற்கனவே இது போன்ற திட்டம் மும்பை பி.எம்.சி. கேண்டீனில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எம்.சி. கேண்டீனில் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தவுடன், பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.