மகாராஷ்டிரா மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை – வீட்டுக்கே வந்து ஆல்கஹால் விநியோகம்

 

மகாராஷ்டிரா மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை – வீட்டுக்கே வந்து ஆல்கஹால் விநியோகம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

மதுபான கடைகளில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாசிக் மற்றும் புனேவில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான பைலட் அடிப்படையில் ஆன்லைன் டோக்கன் அல்லது இ-டோக்கன் முறையைத் தொடங்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உடல் ரீதியான தூர விதிமுறைகளை மீறி, கடந்த வாரம் மாநிலத்தில் பல இடங்களில் மதுபானக் கடைகளுக்கு வெளியே மதுப்பிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கூடிவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

alcohol

புதிய முறையின் கீழ், ஒரு நபர் மாநில கலால் துறை போர்ட்டலில் பதிவுசெய்து டோக்கன் பெறலாம். பின்னர் மதுக் கடைக்கு சென்று மதுபானம் வாங்கலாம் என்று துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புனே மற்றும் நாசிக் பிராந்தியத்தில் மொத்த விற்பனையாளர்களின் சங்கம் உருவாக்கிய மொபைல் ஆப்-ஐ அடிப்படையாகக் கொண்டது. கடைக்காரர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து அருகிலுள்ள மதுக் கடைக்கு அந்த ஆர்டரை கொடுக்கலாம்.