மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்தொற்று கவலைக்குரிய நிலையில் உள்ளது…. பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

 

மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற  மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்தொற்று கவலைக்குரிய நிலையில் உள்ளது…. பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்தொற்று கவலைக்குரிய நிலையில் உள்ளது என பொருளாதார நிபுணர் ஷாமிகா ரவி எச்சரிக்கை செய்தார்.

பிரபல பொருளாதார  நிபுணர் ஷாமிகா ரவி டிவிட்டரில் தனது புள்ளியல் பகுப்பாய்வுகளை அப்டேட் செய்து வருகிறார். அவை சமூக வலைதளங்களில் அதிகளவில் பாலோ செய்யப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது ஸ்லைடுகள் அரசாங்கத்தால் பயன்படுததப்பட்டுள்ளன அந்த அளவுக்கு புள்ளியல் பகுப்பாய்வுகள் துல்லியமாக இருக்கும்.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

தற்போது கொரோனா வைரஸ் தொடர்பாக டேட்டா பகுப்பாய்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. அந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்தொற்று கவலைக்குரிய நிலையில் உள்ளது. மேலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது மற்றும் அங்கு தொடர்பு-தடமறிதல் மற்றும் சோதனைக்காக சிறப்பு மூலோபாயம் இல்லை.

நோயாளிக்கு மருத்துவ பரிசோதனை

மகாராஷ்டிராவுடன் குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஒரு பெரிய இரண்டாவது அலை உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமை ஆபத்தானது. கட்டுப்பாடு, தொடர்பு-தடமறிதல் மற்றும் சோதனை ஆகியவற்றின் கலவை, வளைவை ப்ளாட் செய்ய உதவும். கட்டுப்பாடு மற்றும் தொடர்பு-தடமறிதல் மோசமாக இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். மாநிலங்கள் ஒரு மூலோபாயத்தை வகுத்து  அதை கண்டிப்பாக  செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.