மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்தா? – உத்தவ் தாக்கரே விளக்கம்

 

மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்தா? – உத்தவ் தாக்கரே விளக்கம்

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு மிகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல் தவறானது, போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படமாட்டாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு மிகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பீதி காரணமாக அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

train

இது குறித்து உத்தவ் தாக்கரேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தற்போது 50 சதவிகித ஊழியர்களைக் கொண்டே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்து சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை. 
பொது மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

mumbai

அடுத்த 20 நாட்களுக்கு தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். அரசின் அறிவுரையை ஏற்காமல் மக்கள் தொடர்ந்து தேவையற்ற பயணத்தை மேற்கொண்டால், அதன் மூலம் கொரோனா பாதிப்பு வேகமாக பரவுகிறது என்று தெரியவந்தால் பொது போக்குவரத்தை ரத்து செய்வது பற்றிப் பரிசீலிக்கப்படும்” என்றார்.