மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க- சிவசேனா ஆட்சி !

 

மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க- சிவசேனா ஆட்சி !

கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது.

கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க கூட்டணிக் கட்சியே முன்னிலை வகிக்கிறது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க  145 இடங்கள் தேவையான நிலையில், தற்போது 160 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதனால், மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க- சிவசேனா ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 

BJP - Shiv sena

ஹரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்னும் பட்சத்தில், பா.ஜ.க 35 இடங்களிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் மற்ற காட்சிகள் 23 இடங்களிலும் முன்னிலை வகிப்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும்,  இம்மாநிலத்தில் காங்கிரஸ்- பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.