மகாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் மாற்றங்கள்: மீண்டும் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.

 

மகாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் மாற்றங்கள்: மீண்டும் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரியை பா.ஜ..க. தலைவர்கள் இன்று சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. (105) ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு முதல்வர் பதவியில் சமகாலம் இருக்க வேண்டும் என சிவ சேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் பா.ஜ.க. மறுத்து விட்டது. சிவ சேனாவும் எங்க கோரிக்கைக்கு செவி சாய்த்தால்தான் ஆதரவு தருவோம் என கூறியது.

தேவேந்திர பட்னாவிஸ்

ஆனால் பா.ஜ.க. தனது முடிவில் உறுதியாக இருந்தது. இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க சிவ சேனா முயற்சிகள் மேற்கொண்டது. முதலில் தேசிய வாத காங்கிரஸ், சிவ சேனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் நேற்று சிவ சேனாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என தெளிவாக கூறிவிட்டார். சோனியா காந்தியும் ஏற்கனவே சிவ சேனாவுக்கு ஆதரவு கிடையாது என தெரிவித்து விட்டார். இதனால் சிவ சேனா மறுபடியும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நடத்திய கூட்டத்தில் 6 சிவ சேனா அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சி அமைப்பது குறித்து பேசியதாக தகவல். இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரியை பா.ஜ.க. அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சுதிர் சந்தித்து பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர். அதேசமயம் சிவ சேனா உத்தவ் தாக்கரே இன்று அவரது இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 56 சிவ சேனா எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளார்.