மகாராஷ்டிராவில் கவர்னரை தனித்தனியாக சந்திக்கும் பா.ஜ.க., சிவ சேனா தலைவர்கள்….

 

மகாராஷ்டிராவில் கவர்னரை தனித்தனியாக சந்திக்கும் பா.ஜ.க., சிவ சேனா தலைவர்கள்….

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா தலைவர்கள் இன்று தனித்தனியாக அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யரியை சந்தித்து பேச இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், சிவ சேனாவும் இணைந்து போட்டியிட்டன. எதிர்பார்த்த மாதிரியே பா.ஜ.க. கூட்டணி, ஆட்சி அமைக்க தேவையானதை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவ சேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து உடனே பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே

ஆனால், முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் தங்களுக்கு விட்டு கொடுப்பதாக எழுதி கொடுத்தால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே குண்டை தூக்கி போட்டார். ஆனால் அதற்கு பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. அதேசமயம் முதல்வர் பதவி விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் ஒரே பிடிவாதத்தில் உள்ளன. இதனால் ஆட்சி அமைப்பதில் அங்கு சிக்கல் நீடித்து வருகிறது.

பகத் சிங் கோஷ்யரி

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்னாவிசும், சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திவாகர் ராவ்டேவும் இன்று அம்மாநில கவனர் பகத் சிங் கோஷ்யரியை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தற்போதை அரசியல் சூழ்நிலை மற்றும் ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கவர்னரிடம் பேசுவார் என்றும், திவாகர் ராவ்டே சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் கவர்னரிடம் பேசுவார்கள் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.