மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- உத்தவ் தாக்கரே

 

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- உத்தவ் தாக்கரே

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 911பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 9 பேர் பலியாகினர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

 

uddhav thackeray
ஒடிஷா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.  இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அங்கு 1,700பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.