மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக்குள் புகைச்சல்…..சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு ஆதரவு கொடுப்பதை மறுஆய்வு செய்யுங்க…. உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

 

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக்குள் புகைச்சல்…..சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு ஆதரவு கொடுப்பதை மறுஆய்வு செய்யுங்க…. உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதை மறுபரிசீலனை செய்யும்படி உத்தவ் தாக்கரேவை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிராவில் நகமும், சதையும் போல இருந்த பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன் முறிந்தது. ஆட்சியை சமகாலம் விட்டுக்கொடுக்க மறுத்ததால் பா.ஜ.க.வுடான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டு, பரம எதிரியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சிவ சேனா அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதை மறுபரிசீலனை செய்யும்படி சிவ சேனாவை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி டிவிட்டரில், சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆர்.க்கு ஆதரவு அளிப்பது குறித்து உத்தவ் தாக்கரே விளக்கம் அளிப்பது அவசியம் என பதிவு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல்வரை சந்தித்து அவர் எதன் காரணமாக சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆரை ஆதரிக்கிறார் என்பதை தெரிந்து  கொள்ள போகிறேன் என தெரிவித்தார்.