மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவார்… உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

 

மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவார்… உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு நரேந்திர மோடி டிவிட்டரில் புகழாரம் சூட்டினார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவ சேனா ஆட்சியை அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே

மும்பை சிவாஜி பார்க்கில் நேற்று உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. அந்த விழாவில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய் (சிவ சேனா தலைவர்கள்), ஜெயந்த் பாட்டீல் மற்றும் சாகன் புஜ்பால் (காங்கிரஸ் தலைவர்கள்), பாலாசாகேப் மற்றும் நிடின் ரவுத் (தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்) ஆகிய 6 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சிவ சேனா அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் உத்தவ் தாக்கரேவுக்கு டிவிட்டரில் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்கரே ஜி-க்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக அவர் விடாமுயற்சியுடன் அவர் பணியாற்றுவார் என நான் உறுதியாக நம்புகிறேன் என டிவிட்டரில் வாழ்த்து  தெரிவித்து இருந்தார்.