மகாத்மா காந்தியவே ஒரு கோவிலுக்குள்ள விட முடியாதுன்னு சொல்லியிருக்காய்ங்க..! எந்தக் கோவில் தெரியுமா?

 

மகாத்மா காந்தியவே ஒரு கோவிலுக்குள்ள விட முடியாதுன்னு சொல்லியிருக்காய்ங்க..! எந்தக் கோவில் தெரியுமா?

காந்தி,நான்குமுறை திருவனந்தபுரத்தை தலைநகராகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வந்திருக்கிறார்.அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது.

காந்தி,நான்குமுறை திருவனந்தபுரத்தை தலைநகராகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வந்திருக்கிறார்.அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது.

காந்தி கடலில் குளித்துவிட்டு வந்து, கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து வெளியில் நின்றே வணங்கி விட்டு போய்விட்டார். என் தெரியுமா? இந்த சம்பவம் நடந்தது 1925-ம் வருடம் மார்ச் 14-ம் தேதி.அப்போதைய திருவிதாங்கூர் அரசின் சட்டத்தின்படி ஒடுக்கப்பட்ட மக்களும்,கடல் கடந்து பயணம் போய் வந்தவர்களும் இந்துக் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!

பகவதி அம்மன் கோவில்

இதன்பிறகு நான்காவது முறையாக 1937 ஜனவரி 15-ம் தேதி நாகர் கோவில் வந்திருந்தார்.அன்று நாஞ்சில் நாட்டில் கடும் மழை,இருந்தும் நல்ல கூட்டம் , இருபதாயிரம் பேர் வந்ததாக பத்திரிகைகள் எழுதின.இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில், திருவிதாங்கூர் அரசு கொஞ்சம் இறங்கி வந்திருந்தது.

அன்றைய திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் பாலராமவர்மா ஆலயத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்ல அனுமதி வழங்கி இருந்தார்.நாகர் கோவில் நாகராஜா கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு,மாலை எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் பேசிய காந்தி பாலராம வர்மாவுக்கு நன்றி தெரிவித்தார். 

பகவதி அம்மன் கோவில்

இந்த சட்டத்தால்தான்,தன்னால் ஆலயப் பிரவேசம் செய்ய முடிகிறது’ என்றார் காந்தி.மறுநாள் காலை ,நாகர்கோவில் அரிசன சேவா சங்கத்தினர் பஜனை பாடிவர,காந்தி கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். அதற்குப்பிறகு,காந்தி கன்னியாகுமரி வரவே இல்லை.அவருடைய அஸ்த்திதான் வந்தது.