மகாசிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு – குவியும் பக்தர்கள்

 

மகாசிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு – குவியும் பக்தர்கள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து சிவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. சிவன் கோவில்களில் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை காலை வரை உறங்காமல் கண்விழித்து சிவனை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே சிவன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர்.

ttn

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்கு பக்தர்களுக்கு இலவச அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.