மகள் வாங்கிய விருது…நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி: வைரல் போட்டோஸ்!

 

மகள் வாங்கிய விருது…நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி: வைரல் போட்டோஸ்!

மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இதனால் அவருக்கு இந்தாண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சுட்டி குழந்தை நட்சத்திரம் மானஸ்வி.  இவர் நடிகர் கொட்டாச்சி – அஞ்சலியின் மகள்.  சமீபத்தில் இவர் தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். 

ttn

இந்நிலையில்  மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இதனால் அவருக்கு இந்தாண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.

 

ttn

இந்த விருதை மானஸ்வி  தனது  தந்தையுடன் சென்று வாங்கியுள்ளார். அப்போது தந்தை மகள் இருவரும் கட்டியணைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக கொட்டாச்சி சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்திருந்த நிலையில் அதை மனைவி அஞ்சலியும், மகள்  மானஸ்வியும்  நிறைவேற்றிக் கொடுத்ததாக  உணர்ச்சி பொங்க  கூறியது குறிப்பிடத்தக்கது.