மகள் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி: வைரல் வீடியோ!

 

மகள் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி: வைரல் வீடியோ!

முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

சென்னை: முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் வரும் 11ந்தேதி சென்னையில் உள்ள எம்.ஆர்.சி நகரில் பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் பிஸியாக  உள்ளார். 

rajini

இந்தநிலையில், இன்று காலையில், சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார். அழைப்பிதழை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘மகளின் திருமண விழாவிற்கு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்’ என்று தெரிவித்தார்.

 

 

முன்னதாக மகள் திருமண நிகழ்வையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ரஜினி முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி… பாடலுக்கு நடனம் ஆடியுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.