மகள் திருமணத்திற்காக இன்று பரோலில் வருகிறார் நளினி

 

மகள் திருமணத்திற்காக இன்று பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார்.

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இன்று  பரோலில் வருகிறார்.

nalini

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

hc

அதன்படி கடந்த 5 ஆம் தேதி நளினியே  தனக்காக  நீதிமன்றத்தில் ஆஜராகி  வாதாடினார். அதில், நானும் என் கணவரும் 28 ஆண்டுகளாகச்  சிறையில் உள்ளோம். என் குழந்தையும் சிறையில் பிறந்தது. அவளை நான் வளர்க்கவில்லை. என் மகள் திருமணத்திற்கு  ஆறுமாதம் பரோல் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. 

nalini

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையிலிருந்து, நளினி  இன்று பரோலில் வெளியே வருகிறார். உத்தரவு கிடைத்ததும் அவர்  காலை 8.30 மணிக்கே சிறையிலிருந்து வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் அவர் , வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்குகிறார். நளினிக்கு அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளனர். நளினி பரோலில் சிறையிலிருந்து வெளியே வரும் இந்த கால இடைவெளியில், அவர் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவோ, ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.