மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

 

மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தினமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தினமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்குத் தண்டனை கடுமையாக்கப் படாதது தான் காரணம் என்று பல தரப்பு மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குருநாதன் (48) அவரது மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது மனைவி போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

ttn

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவரின் மீதான குற்றம் நிரூபணமானதால் குருநாதனுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது. அபராத தொகையைச் செலுத்தவில்லை என்றால் இன்னும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொதுவாக பாலியல்  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். ஆனால், இவர் தனது இரண்டு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததால் தண்டனையும் இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.