மகள்களுக்கு குப்பைகளால் ஆன கலைப் பொருளை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த கோடீஸ்வரர்!

மகள்களுக்கு குப்பைகளால் ஆன கலைப் பொருளை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த கோடீஸ்வரர்!

ஸ்காட்லாந்தின் கோடீஸ்வரர் ஒருவர் குப்பைகளால் செய்யப்பட்ட கலைப் பொருளை தன்னுடைய மகள்களுக்கு பரிசாக அளித்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 
ராக் சான்ட்ஃபோர்ட் என்பவர் ஸ்காட்லாந்தில் தனித் தீவையே சொந்தமாக வைத்திருக்கிறார். மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர். கிறித்துமசுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இவர், தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்மஸ் விருந்து கொண்டாடினார். 

இவர் குப்பைகளிலிருந்து எடுக்கப்பட்ட கலைப் பொருட்களை பழைய செய்தித்தாளில் சுற்றி தன்னுடைய இரண்டு மகள்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்து அதை அவர்கள் திறக்கும் காட்சியை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். தன்னுடைய மகள்கள் பழைய செய்தித்தாளைக் கிழித்து, அந்த பரிசை எடுக்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கும் அவர் சிரிக்கிறார்.

Gift Made by debris

இது குறித்து அவர் கூறுகையில், “பரிசை அவர்கள் பிரிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சாலையிலிருந்து நான் எடுத்த குப்பைகள், மணல் ஆகியவற்றைக் கொண்டு இந்த பரிசை வடிவமைத்தேன். இப்படி சில பொருட்களை லண்டனில் உள்ள என்னுடைய அருங்காட்சியகத்திலும் வைத்துள்ளேன். அப்பாவிடமிருந்து இதுபோன்ற பரிசுகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்” என்றார்.
ராக் சான்ட்ஃபோர்ட் சுற்றச்சூழல் ஆர்வலராக உள்ளார். அது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். சுற்றச் சூழலுக்கு தீங்கில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று இருக்கிறார். இதனால், இந்த விருந்தில் அசைவத்துக்கு இடமில்லை. நனி சைவம் என்று அழைக்கப்படும் வீகன் டயட் முறையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்று கூறியுள்ளார். 
தந்தையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அவரது இரு மகள்களும் 25ம் தேதி அவர்களுடைய தாயுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளார்களாம். அவராவது நல்ல பரிசை அளிக்கிறாரா என்று பார்ப்போம்.