மகளே தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொன்ற வழக்கில் புதிய திருப்பம்…அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

 

மகளே தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொன்ற வழக்கில் புதிய திருப்பம்…அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை  ஒரு பிளாஸ்டிக்  பைக்குள் அடைக்கப்பட்டு அந்த சூட்கேஸின்  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

மும்பை மாகிம் கடற்கரையில், கடந்த 4-ம் தேதி, சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்த சிலரின் கண்களில்  தென்பட்டது அந்த சூட்கேஸ். அதிலிருந்து ரத்தம்  வழிய கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சூட்கேஸை கைப்பற்றி அதைத் திறந்துப் பார்த்தபோது அதில் ஆண் சடலம் ஒன்று, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை  ஒரு பிளாஸ்டிக்  பைக்குள் அடைக்கப்பட்டு அந்த சூட்கேஸின்  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

ttn

விசாரணையில் இறந்தவர் 59 வயதான பெனட் ரிப்பலோ என்பது தெரியவந்தது. அவரை வளர்ப்பு மகளான 19 வயது  ஆரத்யாவும், அவரது 16 வயது காதலனும்  கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.கடவுளே என்னை மன்னியுங்கள். நான் மிகவும் தவறான பெண்’ என்று எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அகப்பட்டது.

ttn

ஆரத்யா அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதை அவரது  வளர்ப்பு தந்தை கண்டித்ததுடன் அவருக்கு தொடர்ந்து பாலியல்  தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இதனால் கடந்த 26-ம் தேதி, பெனட்டை கம்பால் தாக்கி, ஆண் நண்பரான  சிறுவனின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மூன்று நாட்கள் சடலத்துடன் இருந்த அவர்கள், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி 3  சூட்கேஸ்களில் அடைத்து, ஆட்டோவில் சென்று மாகிம் கடற்கரையில் வீசியது தெரியவந்தது.

 

ttn

இந்த  வழக்கில் இளம் பெண்ணின் 16 வயது காதலர்  சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட  அந்த பெண்ணிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. அதில் அந்த பெண்ணின் ஆதார் மற்றும் பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை ஆய்வு செய்த போது  அந்த பெண்ணுக்கு  17 வயது 6 மாதம் ஆவது தெரியவந்துள்ளது.  இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அந்த இளம்பெண்ணின்  வயதை கண்டுபிடிக்க  போலீசார் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதுவரை  அந்த பெண் சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.