மகளுடன் தமிழில் பேசி அசத்திய தோனி – வைரலாகும் வீடியோ!

 

மகளுடன் தமிழில் பேசி அசத்திய தோனி – வைரலாகும் வீடியோ!

தோனியும் அவரது மகள் ஸிவாவும் தமிழில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

தோனியும் அவரது மகள் ஸிவாவும் தமிழில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் போது தோனி கிடைக்கும் நேரத்தில் ஸிவாவோடு இருக்கிறார். 

View this post on Instagram

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

இந்நிலையில் அவர் ஸிவாவோடு விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் ஸிவா, தோனியிடம் தமிழில் பேசி உள்ளார். தனது தந்தையை பார்த்து ‘எப்படி இருக்கீங்க’ என்று ஸிவா கேட்கிறார். அதற்கு தோனி ‘நல்லா இருக்கேன்’ என்கிறார். 

இதே போல ஸிவாவும் தோனியும் போஜ்பூரியிலும் பேசிக் கொண்டனர். இந்த வீடியோவை தமிழக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதே போல தோனிக்கு அவரது மகள் கேரட் ஊட்டும் வீடியோவும் இணையத்தைக் கலக்கி வருகிறது.