மகளுடன் ஆன்மீக பயணத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் இதோ!

 

மகளுடன் ஆன்மீக பயணத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள்  இதோ!

ஆன்மீக பயணத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மீக பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தர்பார் படப்பிடிப்பு முடிந்து பத்து நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.  கடந்த 13 ஆம் ஆண்டு  காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு    மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூன் சென்றார். பின்னர் உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தை  ரஜினி அடைந்தார். அங்கு பக்தர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில்  வெளியானது. 

rajini

இந்த ஆன்மீக பயணத்தில் ரஜினியுடன் அவரது மகள்  ஐஸ்வர்யா தனுஷ் மாற்றம் மற்றும் ரஜினியின் நண்பரும் சென்றுள்ளனர். இந்நிலையில் ரஜினியின் இந்த ஆன்மீக பயணத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதில் சாமி தரிசனம் செய்வது, மலை மீது ஏறுவது, தேநீர் அருந்துவது, ரஜினியின் கட்சி  சின்னமான கருதப்படும் பாபா முத்திரையின் அருகில் உள்ள புகைப்படம் என பல புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 

வரும் டிசம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் முன்னதாக ஆன்மீக  பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.