மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

 

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்த போட்டியில் வங்காளதேச அணியையும் வீழ்த்தியது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வெர்மா 46 ரன்களும், தனியா பாட்டியா 23 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 34 ரன்களும், கட்டே மார்ட்டின் 25 ரன்களும், மேடி க்ரீன் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் இலங்கையை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.