மகளிர் காங்கிரஸின் முக்கிய பொறுப்பிற்கு திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்

 

மகளிர் காங்கிரஸின் முக்கிய பொறுப்பிற்கு திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்

சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான திருநங்கை அப்ஸரா ரெட்டி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புதுடெல்லி: சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான திருநங்கை அப்ஸரா ரெட்டி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் திறம்பட செயல்பட்டு வருபவர் திருநங்கை அப்ஸரா ரெட்டி. அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவிலும், அதன்பின் டிடிவி தினகரனின் அமமுகவிலும் இருந்து பணியாற்றியுள்ளார். 

அதன்பின், தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய இவர், அரசியலில் சில மாதங்கள் ஈடுபடாமல் ஓய்வில் இருந்த அப்சரா ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து அப்சரா ரெட்டி வாழ்த்து பெற்றார். இதன்மூலம், 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணிக்கு, முதல் திருநங்கை பொதுச்செயலாளர் என்ற பெருமையை அப்சரா ரெட்டி தட்டிச் செல்கிறார்.