மகளின் கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி

 

மகளின் கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி

பிரதமர் மோடியால் தத்தெடுக்கப் பட்ட டோம்ரி கிராமத்தைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரது கிராமத்தில் இருந்த  கங்கை நதிக்கரையைத் தானே சுத்தம் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி  மங்கல் கேவத். பிரதமர் மோடியால் தத்தெடுக்கப் பட்ட டோம்ரி கிராமத்தைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரது கிராமத்தில் இருந்த  கங்கை நதிக்கரையைத் தானே சுத்தம் செய்தார். அவரின் இந்த செயல் மோடியின் கவனத்தை ஈர்த்தது. 

ttn

மங்கல் கேவத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகளின் திருமண அழைப்பிதழை டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்திற்கும் வாரணாசியில் உள்ள மோடியின் அலுவலகத்திற்கும் நேரில் சென்று கொடுத்தார். அதனைப்பார்த்த மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணநாளன்று அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த மங்கல் கேவத், அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது ஆச்சரியமாக உள்ளது. அவரிடம் இருந்து பதில் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடிதத்தைப் பார்த்த உடன் சந்தோஷத்தின் உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டேன் என்று கூறினார். இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

இந்நிலையில் வாரணாசி சென்ற முதல்வர் மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த மங்கல் கேவத்தை நேரில் சந்தித்து, மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறினார். மேலும், அவர் தூய்மை இந்தியா திட்டத்துக்காக மங்கல் கேவத் அளித்த பங்களிப்புக்குப் பாராட்டுகள் தெரிவித்தார். இது   மங்கல் கேவத்தின் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.