மகளின் ஆசைக்காக சொத்தை விற்று மைதானம் கட்டிய தந்தை

 

மகளின் ஆசைக்காக சொத்தை விற்று மைதானம் கட்டிய தந்தை

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுரேந்தரா என்பவர் தனது மகளின் ஆசைக்காக சொத்துக்களை விற்று மைதானம் காட்டித்தந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுரேந்தரா என்பவர் தனது மகளின் ஆசைக்காக சொத்துக்களை விற்று மைதானம் காட்டித்தந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுரேந்திரா. இவர் மத்திய அரசின் சர்வே துறையில் கிளார்காக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரியா புனியா டெல்லியில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே பேட்மிண்டன் விளையாடி வந்த பிரியா, ஒருகட்டத்தில் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து விளையாட ஆரம்பித்தார்.  அவரது ஆர்வத்தினால் டெல்லி உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பிரியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பிரியா புனியாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது தந்தை சுரேந்திரா ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த பயிற்சியாளர்கள், பிரியாவுக்கு பயிற்சி அளிக்க முடியாது எனக்கூறி அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இதனால் துவண்டு போகாத சுரேந்திரா, தனது மகளின் ஆசைக்காக  சொந்தமாக கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தனது சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் சுமார் ரூ.22 லட்சம் செலவில் ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியில் ஒரு மைதானத்தையே வாங்கியுள்ளார்.

மேலும், கடந்த 2010-ம் ஆண்டு முதல் தீவிர பயற்சி மேற்கொண்ட பிரியா 2015-ல் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் 42 பந்துகளில் 95 ரன்களை விளாசியுள்ளார். இதனால் இந்தியா ஏ அணியில் தேர்வான அவர், நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார்.

rajasthan girl

இதன்மூலம், வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய மகளிர் டி-20 போட்டிக்கான அணியில் பிரியா இடம்பிடித்துள்ளார்.