‘மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை’ – அறிவாலயத்தில் வைரமுத்து!

 

‘மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை’ – அறிவாலயத்தில் வைரமுத்து!

அண்ணாவும், கருணாநிதியும் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டியவர்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை: அண்ணாவும், கருணாநிதியும் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டியவர்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து சந்தித்து பேசினார்.

அப்போது ஸ்டாலினுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்திய நிலையில், சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கியது போன்ற சிறிய அளவிலான கருணாநிதி சிலையை வைரமுத்துவிற்கு ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்.

vairamuthu

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு சிலை எடுத்த மு.க.ஸ்டாலின், திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, மகன் தந்தைக்கு ஆற்றும் கடமையைச் செய்திருக்கிறார் என புகழாரம் சூட்டினார்.

மேலும், அண்ணாவும், கருணாநிதியும் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் அருகருகே இருக்க வேண்டியவர்கள் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.