மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி

 

மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி

தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது

பாட்னா: தன்னுடைய கோயிலுக்கு  நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்த மந்திரவாதி சுரேந்திர பிரசாத் சிங் என்பவர் நரபலி கொடுக்க அனுமதிக்க கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்ப மனு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள மாவட்ட அதிகாரி சஞ்சிவ் குமார், நரபலி குறித்த விண்ணப்பம் எதுவும் வரவில்லை. நரபலி என்பது சட்டப்படி குற்றம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நரபலி குற்றமாகாது என்று கூறியுள்ள மந்திரவாதி சுரேந்திர பிரசாத் சிங், தன்னுடைய கோயிலுக்கு  நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். நரபலி கொடுப்பது கடும் குற்றம் என்ற நிலையில், அதனை தவறில்லை என கூறும் மந்திரவாதி, தனது மகனையே நரபலி கொடுக்கப் போவதாக கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.