மகனுடன் மல்லுக்கட்டும் விஜய்சேதுபதி- வைரலாகும் வீடியோ!

 

மகனுடன் மல்லுக்கட்டும் விஜய்சேதுபதி- வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய்சேதுபதி சிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி சிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சேதுபதி,பண்ணையாரும் பத்மினியும் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – அருண்குமார் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இதில் ‘இறைவி’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

vijaysethupathi

அதில் இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதியின் வசனத்தில் தொடங்கி முடியும் டீசரில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் ஜாலியாக சண்டைபோடும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.