மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி… ’குதிரை பேரத்தை’ மறைக்கும் ராமதாஸ்..!

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி… ’குதிரை பேரத்தை’ மறைக்கும் ராமதாஸ்..!

மத்தியில் எப்படியாவது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என இலைமறைகாயாக அறிக்கைவிட்டு சமாளித்து வருகிறார் என்று அவரது கட்சி தொண்டர்களே பேசிக் கொள்கின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கர்நாடகாவில் குதிரை பேரம் நடைபெறுவதாக பேசி வருவது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ramadoss

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பெரிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ். கூட்டணி இல்லாத காலத்தில் குதிரை பேரம் என்ற வார்த்தை அவரது அறிக்கையில் குறைந்தது பத்து இடங்களில் இருக்கும். நேற்றைய அறிக்கையில் நோகாத வகையில் அடித்து இருக்கிறார்.  பாஜக தரப்பு கோடிக்கணக்கான ரூபாய்களை இறைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்று தன் தோல்வியை தானே ஒப்புக் கொண்டிருக்கிறார்.Anbumani

எல்லாம் கூட்டணி தர்மம்தான். இதே ராமதாஸ் கடந்த காலத்தில் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது. அது தேர்தல் ஒப்பந்தம் என்று கூறுவார். இப்போது அந்த வார்த்தையையே மறந்துவிட்டார். மறக்கமாட்டாரா பின்னே… அதிமுகவிடம் இருந்து ராஜ்ய சபா எம்.பி வேண்டும். அதை வைத்து பாஜகவிடம் மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் எப்படி கூட்டணி முடிந்து விட்டது என அறிவிப்பார்.

 Edappadi

மத்தியில் எப்படியாவது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என இலைமறைகாயாக அறிக்கைவிட்டு சமாளித்து வருகிறார் என்று அவரது கட்சி தொண்டர்களே பேசிக் கொள்கின்றனர்.