மகனுக்கு தளபதி விஜய் என பெயர் சூட்டிய ரசிகர்: வைரலாகும் பிறப்பு சான்றிதழ் போட்டோ

 

மகனுக்கு தளபதி விஜய் என பெயர் சூட்டிய ரசிகர்: வைரலாகும் பிறப்பு சான்றிதழ் போட்டோ

விஜய் ரசிகர் ஒருவர் தன் மகனுக்கு தளபதி விஜய் என பெயர் சூட்டியுள்ளார்.

சென்னை: விஜய் ரசிகர் ஒருவர் தன் மகனுக்கு தளபதி விஜய் என பெயர் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாய் திகழும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் பெயரை பச்சை குத்திக் கொள்வது, அவருக்காக பாலாபிஷேகம் செய்வது என தீவிர ரசிகர்களும் அதிகம். இந்நிலையில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற விஜய் ரசிகருக்கு கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தளபதி விஜய் என்று பெயர் சூட்டியுள்ளார். அதனை பிறப்பு சான்றிதழிலும் பதிவு செய்துள்ளார்.

bc

இந்த பிறப்பு சான்றிதழ் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.